Total Pageviews

Tuesday, October 13, 2026

எண்ணம் தூய்மையாக இருந்தால் தான் உங்களது செயலும் தூய்மையாக இருக்கும்.

 


எண்ணம் தூய்மையாக இருந்தால் தான் உங்களது செயலும் தூய்மையாக இருக்கும்.

எண்ணம்… சொல்… செயல்… எப்படி இருக்க வேண்டும்…

1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக…
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.
5.ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும் !

நீ வேறல்ல !

 உன் எண்ணம் வேறல்ல !

உன் சொல் வேறல்ல !

உன் செயல் வேறல்ல!

எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்.

வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன், உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல!

எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ! ஆத்மாவும் பிரிகின்றது !

எண்ணிய எண்ணமும் ,சொல்லிய சொல்லும் ,செய்த செயலும் நிலைக்கின்றது.

 ஆகவே

1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.

2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது.

சுற்றி வரும் காற்றிலே நல்ல பூவின் மணமும் !கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு.

நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்!

No comments:

Post a Comment

இன்றைய காலத்தில் மணப்பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது? இரு வீட்டரின் எதிர்பார்ப்பு அதிகமுள்ளதா?

  மணப்பெண்கள் அரிதாகவில்லை. அவர்களின் எதிர் பார்ப்புத் தான் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் கவலைப் படவேண்டாம் உலக அளவில் பெண்கள் சதவிகிதம் அதி...