Total Pageviews

Thursday, December 29, 2011

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்

தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.
இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Thanks to malaimalar

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்!

 அதிக நேரம் டி.வி. பார்ப்பதும் நல்லதல்ல. அந்த நேரத்தில் கண்களில் அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் டி.வி. பார்க்கும்போது கண் சம்பந்தப்பட்ட நரம்பு செயலிழந்து விட வாய்ப்புண்டு. குடித்துவிட்டு டி.வி. பார்ப்பதென்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல ஆகும்.

அடிக்கடி சேனலை மாற்றிக் கொண்டு இருப்பதும் கண்ணுக்கு நல்லதல்ல. ஒரு சேனலிலிருந்து இன்னொரு சேனலுக்கு மாறும்போது முதலில் ஒரு நொடி இருட்டும், அடுத்த நொடி அதிக வெளிச்சமும் ஏற்படும். இது கண் உறுப்புக்களைத் தூண்டித் தூண்டி பார்க்கச் செய்து கண்களை சீக்கிரமே சோர்வடைய வைக்கிறது.
இதைத் தடுக்க சேனலை மாற்றாமல், ஒரே சேனலையே பாருங்கள் என்று சொன்னால், யாராவது கேட்பார்களா? கண்டிப்பாக கேட்க மாட்டார்கள். கண் பாதிக்காமல் சேனலை மாற்றி மாற்றிப் பார்க்க ஒரு புதிய வழியை சொல்கிறேன், செய்து பாருங்கள். சேனலை மாற்றுவதாக இருந்தால் முதலில் கண்ணை ஒரு நொடி மூடி வைத்துக்கொண்டு சேனலை மாற்ற ரிமோட்டை அழுத்துங்கள்.
சேனலை மாற்றியபிறகு, கண்களை நான்கைந்து முறை மூடி திறந்து மூடி திறந்து பாருங்கள். அதற்கப்புறம், ஒது பத்து முறையாவது கண்ணை சிமிட்டிவிட்டு அதற்கப்புறம் டி.வி.யைப் பார்க்க ஆரம்பியுங்கள். இந்த மாதிரி செய்தால் கண்ணுக்கு ஓரளவு களைப்பு ஏற்படாது. வெளியூர் செல்லும் பஸ்களில் இப்பொழுதெல்லாம் டி.வி. கண்டிப்பாக இருக்கிறது.
இந்த டி.வி.யை ரொம்ப கிட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, ரொம்ப பின்னாடி உட்கார்ந்து கொண்டு, ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு, எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பது கண்ணுக்கு நல்லதல்ல. அடுத்து டி.வி. ஸ்கிரீன் அகலத்தை மாதிரி, குறைந்தது 7 மடங்காவது தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதுவும் பஸ்ஸில் முடியாது.
அதற்கும்மேல், பஸ் ஆடிக்கொண்டே போவதால் டி.வி. ஒழுங்காகத் தெரியாது. இதுவும் கண்ணுக்கு கெடுதியே. எனவே பஸ்சில் டி.வி. பார்ப்பதைத் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது அல்லது தூங்குவது கண்ணுக்கு ரொம்ப நல்லது. "நாம் பார்க்கும் பொருள், அதிக வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல.
மிகக் குறைவான வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல'' என்று டெலிவிஷன் ஒளியைப் பற்றிய ஆய்வுகளை தொடரும் ஜான் புல்லோ என்கிற விஞ்ஞானி சொல்கிறார். `நான் 20 வருஷமா இருட்டு அறையிலே உட்கார்ந்துதான் டி.வி. பார்க்கிறேன், எனக்கு கண் ஒண்ணும் ஆகலையே. நல்லாத்தானே இருக்கு?' என்று சிலர் சொல்லலாம். நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.
வெளித்தோற்றத்திற்கு எல்லோருடைய கண்களும் நன்றாக இருப்பதுபோல்தான் தோன்றும், டெஸ்ட் பண்ணிப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு கண் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியும். செல்போனைப்போல கம்ப்யூட்டரும் இன்றைய உலகில் மிக மிக முக்கிய தேவையான பொருளாக ஆகி விட்டது.
கம்ப்யூட்டர் இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது. கம்ப்யூட்டர் உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கம்ப்யூட்டர் மாறிவிட்டது. இந்த கம்ப்யூட்டர் உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கம்ப்யூட்டரோடு படுத்து உறங்குகிறார்கள்.
பெரிய பெரிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், காலையிலிருந்து இரவு வரை அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துதான் ஆக வேண்டும். பார்க்கமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஐ.டி. கம்பெனிக்காரர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் கொடுக்கும்போது கண்டிப்பாக அவர்கள் சொல்கிற வேலையை செய்துதான் ஆக வேண்டும்.
`கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்` (சி.வி.எஸ்.) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால், கம்ப்யூட்டரில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும்போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்துவிடுவதுதான் என்று தெரியவருகிறது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை (14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது கண் சிமிட்டுவது குறைந்துவிடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
1. கம்ப்யூட்டர் மானிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மானிட்டர் மீது படுவதாக இருந்தால் மானிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு முன்னால் மாட்டிக்கொள்ளுங்கள்.
2. கம்ப்யூட்டரும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி, நல்ல நாற்காலியாக இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால்தான் கம்ப்யூட்டரில் அதிக கவனம் செலுத்த முடியும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி வந்து விடும். கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள். உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ. முதல் சுமார் 50 செ.மீ. தூரம் தள்ளி, கம்ப்யூட்டர் மானிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள். அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4.தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இடைஇடையில் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக, வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் மானிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மானிட்டரிலிருந்து சுமார்
70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.
6. கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது. எப்படி வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளுங்கள் என்று ஊறுகாய்க்கு டிவி.யில் விளம்பரம் வருவதுபோல, எப்படி வேண்டுமானாலும் டி.வி.யிலும், கம்ப்யூட்டரிலும் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் கண்ணுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

Tuesday, December 27, 2011

மனிதநேயத்தையும் தாண்டி.....தியான பயிற்சி



பிறர் சொல்லாத வரை நாம் அவரை தியான ஆசிரியர் என்றுதான் நம்பக் கூடும். தியானத்தை ஒரு கலையாக மட்டும் அணுகாமல் அறிவியல் மற்றும் வரலாற்று பூர்வமாக பேசுவதைக் கேட்கும்போது, தியானத்தில் அவர் வைத்திருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இன்றுள்ள தியான பயிற்சி ஆசிரியர்களுக்குத் தெரியாத தகவல்களைக் கூட அவர் தெரிவிக்கும்போது, நாமும் அவரிடம் யோகா கற்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மை அறியாமல் ஏற்படுகிறது.
தான் அறிந்த கலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், புழல் சிறைக் கைதிகளுக்கு அவர் தியான பயிற்சி அளிப்பதை சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது.
அவர் சிறைக் கைதிகளை ஏ.டி.ஜி.பி. டோக்ராவாக மட்டுமின்றி மனிதநேயமுள்ள மனிதராக அணுகுவது, கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற 6 மாதங்களாக 50 கைதிகளுக்குத் தியான பயிற்சி அளிக்கும் டோக்ரா, மேலும் பல கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம், தாரிவால் பகுதியைச் சேர்ந்த எஸ்.கே. டோக்ரா, 1982 -ல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. எனப் பல பதவிகள் வகித்துள்ளார்.
இப்போது சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் டோக்ரா, பல்வேறு பணிச்சுமைக்கு இடையே நமக்கு அளித்த பேட்டி:
தியானம் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் இருந்தே தியானம் கற்று வருகிறேன். புத்தங்கள் மூலம் தியானம் செய்யும் முறையை அறிந்த பின்னர் அதன்படி செய்யத் தொடங்கினேன். என்னுள் தியானம் ஏற்படுத்திய மாற்றத்தை உணர்ந்ததால், மேலும் அதைப் பற்றி அதிகமாக படித்தேன். இன்றும் தியானத்தைப் பற்றி படித்து புதிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
நீங்கள் பின்பற்றுவது எந்த வகை தியானம்?
மகரிஷி பதஞ்சலி முனிவர் எழுதிய யோகா சூத்ரா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானத்தை செய்து வருகிறேன். இன்று உலகத்தில் உள்ள அனைத்து தியான வகைகளிலும் பதஞ்சலி கூறியதை அடிப்படையாக கொண்டதே ஆகும். மேலும் மனித மூளை செயல்பாடுகளை நுட்பமாக தெரிந்துக் கொண்டு, அதற்கு ஏற்றார்போல தியானம் செய்கிறேன்.
கைதிகளிடம் தியானம் குறித்த ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்தினீர்கள்?
தியானம் மூலம் கைதிகளின் நடத்தையையும், சிந்தனையையும் மாற்ற முடியும் என எண்ணினேன். மேலும் மன உளைச்சலில் இருப்பவர்களை அதில் இருந்து மீட்க முடியும் என நினைத்தேன்.
அதன்படி புழல் சிறையில் கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டேன். ஏ.டி.ஜி.பி. என்பதற்காக யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை, விருப்பமுள்ள கைதிகள் இதில் சேரலாம் என அறிவித்தேன். முதலில் 10 கைதிகள்தான் சேர்ந்தனர்.
தியானம் அவர்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை மற்ற கைதிகளிடம் கூற, கைதிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. ஒரு வகுப்புக்கு 50 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காக, வேறு கைதிகள் சேர முன்வந்தும் சேர்க்கவில்லை.
தியான முறைகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கிறீர்கள்?
வாரந்தோறும் கைதிகளுக்குத் தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன். 2 மணி நேரம் நடக்கும் வகுப்பில், முதலில் கைதிகள் தியானத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதற்கு அவர்களை மனம் திறந்து பேச வைப்பேன். அவர்கள் அமைதியான மனநிலைக்கு வந்த பின்னர், தியானம் கற்றுக் கொடுக்கிறேன்.
பயிற்சியில் பங்கேற்ற கைதிகளிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
கடுமையான மன உளைச்சலிலும், தீய உணர்விலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் சிக்கித் தவித்த அவர்கள், தியான பயிற்சியின் மூலம் ஆழ்மன அமைதியை உணர்ந்துள்ளனர். தாங்கள் செய்த தவறுகளின் பாதிப்பை புரிந்துள்ள அவர்கள், நல்லவற்றை சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது சக கைதிகளிடம் அன்பு செலுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால், தாங்கள் இருப்பது சிறை என்பதை மறக்கத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த திட்டம்?
இதுவரை அளித்த தியான பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளதால், மேலும் தியான பயிற்சியை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்ததாக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிக புகார்களுக்கு உள்ளாகும் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் புழல் சிறையில் தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இதன் மூலம் சிறைகளில் ஏற்படும் பிரச்னை கட்டுப்படுத்தப்படுவதோடு, அவர்களும் வாழ்க்கையில் நல்ல நிலைக்குச் செல்ல முடியும். இப்பயிற்சியை ஜனவரி இறுதியில் இருந்து தொடங்க உள்ளேன்.

ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!



ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!

டோக்கியோ, டிச.21: ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Monday, December 19, 2011

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும். ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம். சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.

Saturday, December 17, 2011

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்


<>
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம்.

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:

*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.

இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:

1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

****நன்றி : களஞ்சியம்

Friday, December 16, 2011

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்


1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்


எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்


உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!


Thanks to penmai.com

மன அழுத்தம் பற்றி


பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், நீடித்தும் அமைந்து விடுகிறது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில்விலகாது', அந்த நபரிடம்தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்'என்று கூறுவதெல்லாம் உதவாது. அது அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால் வழியிருக்கிறது. மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர் மருந்துகளையோ, சிகிச்சையோ அல்லது இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.
உதவியை நாடுவது மிக முக்கியமானதாகும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
  • அழுத்தமான மனநிலை - பெரும்பாலான நாள், தினமும்
  • மனநிலை மாற்றங்கள் - ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால், அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்
  • பலவீனம் மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழத்தல்
  • கோபம் மற்றும் அமைதியின்மை
  • உறக்கத்தில் மாற்றங்கள் - அதிகமமாக உறங்குதல் அல்லது குறைவாக உறங்குதல்
  • குறிப்பிடத்தகுந்த எடை அதிகரிப்பு அல்லது எடையிழப்பு
  • மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள்
  • கவனித்தலில் மற்ரும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்
  • பாலுறவில் ஈடுபாடு குறைதல்
  • மரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள்
நீங்கள் அறிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்:
ஒரு மருத்துவரையோ அல்லது உடல் நல நிபுணரையோ சந்திக்க அவரை ஊக்கப்படுத்துங்கள்
அவர்களுக்கு இருங்கள
தற்கொலை உணர்வுள்ள நண்பர் அல்லது உறவினருக்கு உதவுதல்
அமைதியாகக் கேளுங்கள்!
யாராவது ஒருவர் மனஅழுத்தமடைந்திருந்தாலோ அல்லது தற்கொலை உணர்வுடன் இருந்தாலோ, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சித்தலே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.
அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்பது இன்றும் சிறந்த செயல். தற்கொலை உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ வேண்டுவதில்லை. அவர்களது பயங்களையும், ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடமே அவர்களுக்குத் தேவைபபடுகிறது.
கேட்டர் - உண்மையாகக் கேட்டல் - எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் - கருத்துக்கூறல், அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுதல் - என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்கப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கோணத்தில் இருந்து விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது கோணத்திலிருந்து அல்ல.
தற்கொலை உணர்வுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவுகிறீர்கள் எனில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ி அம்சங்கள்
தற்கொலை உணர்வுள்ள ஒரு நபர் என்ன விரும்புகிறார்?
  • கேட்கக்கூடிய ஒருவர். அவர்கள் கூறுவதை நேரம் ஒதுக்கி தூய மனதுடன் கேட்கும் ஒருவர். யூகிக்காமல் அல்லது அறிவுரைகளோ அல்லது கருத்துக்களோ கூறாமல் அவ்ரகள் கூறுவதை முழுக்கவனத்துடன் கேட்பவர்.
  • நம்பிக்கைக்குரிய ஒருவர். அவர்களை மதிக்கவும் பொறுப்புகள் ஏற்கவும் முயலாத ஒருவர். அனைத்தையும் முழுமையாக இரகசியமாக வைத்திருக்கக்கூடும்.
  • அக்கறை காட்டும் ஒருவர். அந்த நபரை தேற்றி அமைதியாகப் பேசச் செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். ஏற்கும், நம்பும் மற்றும் மன உறுதியளிக்கும் ஒருவர் "நான் அக்கறைப்படுகிறேன்." என்று கூறும் ஒருவர்.
தற்கொலை உணர்வுள்ளவர்கள் என்ன விரும்புவதில்லை?
  • தனித்திருத்தல். புறக்கணிப்பு பிரச்சினையைப் பத்து மடங்கு மோசமானதாகக் காட்டும். கேளுங்கள்.
  • அறிவுரை கூறப்படுதல். விளக்கங்கள் உதவாது "எல்லாம் சரியாகிவிடும்"போன்ற சுலபமான வாக்குறுதிகள் அல்லது "தைரியமாயிருங்கள்" போன்ற கருத்துக்களும் உதவாது. புகுத்தாய்தல், ஒப்பிடுதல், வகைப்படுத்தல் அல்லது விமர்சித்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள். கேளுங்கள்.
  • குறுக்கு விசாரணை செய்தல். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றவோ அல்லது ஊக்கமளிக்கவோ வேண்டாம். உணர்வுகளைப் பற்றிப் பேசுதல் கடினமானது. தற்கொலை உணர்வுள்ளவர்கள் கட்டாயப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படவோ விரும்புவதில்லை. கேளுங்கள

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...