Total Pageviews

Sunday, December 11, 2011

மூன்று வழிகள்

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்!

பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.! -வில்லியம் ஷேக்ஸ்பியர்

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.

2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3.ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன் படுத்துவது!
.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.

2. சொற்களால் தெரிவித்தல்.

3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.

2. உண்மை.

3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.

2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.


உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலை யற்றிருப்பான்.

2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்க ளற்றிருப்பான்.

3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றி யிருப்பான்.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.

மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்

செயல் புரியாத மனிதனுக்கு

தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
சபாகிளிஸ்

வாழ்வது சிலகாலம் !

உள்ளம் அழுதிடினும்!

உதடுகள் சிரிக்கட்டுமே!


ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்

ஒன்று இரண்டு நிஜங்களும்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,

செய்ய முடியாதவன் போதிக்கிறான்.- பெர்னாட்ஷா

கடுமையான கஞ்சத்தனம்

தகுதியற்ற தற்பெருமை

எல்லையற்ற பேராசை

இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி

வீட்டுக்குள் இருக்கும் போது

ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு

வெளியில் வரும் போது மனிதனாக இரு.

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...