Total Pageviews

Monday, December 12, 2011

சமூக நலம்


இந்திய அரசாங்கம் வலுவான சமூக நல மேம்பாட்டு அமைப்பை நிர்மானித்துள்ளது. தலித்துகள், மலை சாதியினர், பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், மற்றுமுள்ள சமுதாய மக்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்களை இந்திய அரசாங்கம் பின்பற்றி வருகிறது. கிழ்க்காணும் திட்டங்கள் மக்களின் நலவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சத் தேவைகளை நிறை வேற்றுதல் (உணவு, உடை, இருப்பிடம், கல்வி, உடல் நலம் மற்றும் குடிநீர்) மற்றும் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள்.

பார்வையற்றோர், செவித்திறனில்லாதோர், மூளைத்திறன் குறைந்தோர், கை, கால் ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவும் திட்டங்கள் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கானத் திட்டங்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற் கென நிதியுதவி, வயது வந்த பெண்களின் கல்வி, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பேறு கால கவனிப்பு போன்றவை களுக்கானத் திட்டங்கள்.

இளங்குற்றவாளிகள், பாலியல் தொழிலாளிகள், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகயோரின் மேம் படுத்தப்பட்ட மறுவாழ்விற்கானச் சிறப்புத் திட்டங்கள்.

இயற்கைச் சீற்றங்களான பஞ்சம், வெள்ளம், பூகம்பம் போன்றனவற்றிற்கான அவசரகால நிவாரணச் சட்டங்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற பிற சமூக நல மேம்பாட்டு திட்டங்கள்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல் அரசாங்கமும், அரசு சாரா நிறுவனங்களும் பின்வரும் செயல்பாடுகள் மூலமும் கடினமாக உழைத்து சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகப் பெரிதும் பாடுபடுகிறது.

பெண் சக்தி, குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, அனைவரும் சமம், குழந்தை விற்பனை, வரதட்சணை எதிர்ப்பு, மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, ஒழிப்பு பில்லி சூனியம் & மாந்திரீகம் / ஒரு சமூக மற்றும் மருத்துவப் பார்வை) போன்ற சமுதாயக் கேடுகளை ஒழிக்கப் பல விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.

நலிந்தோருக்கான மறுவாழ்வு மையங்கள் (இடம்பெயர்தல், ஆதரவற்ற மற்றும் தெருவோரச் சிறார்கள்,உடல் ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் (எல்லோருக்கும் உணவு / உணவு உரிமை, குடியிருப்பு, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்)

மேலும் தகவல்கள் கருத்துப் பரிமாற்றங்கள், பொருளுதவி, சேவை போன்றன மூலமாக கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வையும் கூரிய அறிவினையும் உண்டாக்கும் முயற்சியோடு இந்திய வளர்ச்சிப்பாதை செல்கிறது.

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...