Total Pageviews

Wednesday, December 14, 2011

இந்திய நதிகள்,அணைகளை தேசியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை-கலாம்



சென்னை:அமெரிக்காவிலும் நதிநீர் தாவா இருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டி உள்ளனர்.அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை, அணைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் நடந்த வேளாண் கருத்தரங்கை அப்துல் கலாம் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போதைய உணவு உற்பத்தி 235 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது. இது 170 மி. ஹெக்டேரில் கிடைக்கிறது. அடுத்த 9 ஆண்டில் நமது தேவை 400 மி. டன் என்ற அளவில் இருக்கும். இதே போல் நீர் நிலைகளை கணக்கிட்டால் குறைந்த தண்ணீரை வைத்து, குறைந்த நிலத்தை வைத்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு நீர் நிர்வாகம் மிகவும் அவசியம்.

நம் நாட்டில் குறைந்தது 1,500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 300 டி.எம்.சி. தண்ணீரை சேமித்தாலே நமது தேவை நிறைவேறி விடும். நாடும் வளமாகும். இதற்கு பெரிய நதிகளையும், பெரிய நீர்நிலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போல், எரிசக்திக்குகிரிட்கொண்டு வந்தது போல் அனைத்து நதிகளை, அணைகளை தேசியமயமாக்க வேண்டும்.

பெரிய அணைகளை பாதுகாக்கும் பொறுப்பையும், பராமரிக்கும் பொறுப்பையும், ராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

நம் நாட்டில் மாநிலங்களுக்கிடையே தண்ணீரை பங்கிடுவதில் தகராறு வருவது போல் அமெரிக்காவிலும் நதிநீர் தாவா ருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளனர். அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை, அணைகளை தேசிய மயமாக்க வேண்டும் என்றார் கலாம்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையை ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று கலாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.


No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...