மதுரை : ஏப்ரல் 13 ல் நடைபெற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளான தி.மு.க., – அ.தி.மு.க. மற்றும் பாஜக கட்சிகள், வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை நீதியின் குரல் அறக்கட்டளை நிர்வாகி எம்.எஸ்.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக தருவதாக அறிவித்தன. தி.மு.க. சார்பில் இலவசமாக கிரைண்டர், மிக்சி, லேப்-டாப், போன்றவைகளும் அ.தி.மு.க. சார்பில், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் தருவதாக அறிக்கையில் குறிப்பிட்டன. இந்த இலவசங்களை அக்கட்சிகள் கட்சி நிதியிலிருந்து தரவில்லை மாறாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து தருகின்றன.
ஏற்கனவே தமிழக அரசு, உலக வங்கியிடம், ஓரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இலவசங்களை அறிவிப்பதால், அதிக கடன் வாங்கும் நிலை நேரிடும். அவை வரிப்பணமாக மக்கள் மீது விழும். இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இனி வரும் தேர்தல்களில் இலவச அறிவிப்பு வெளியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டது. வழக்கு விரைவில் விசாரணை க்கு வருகிறது.
No comments:
Post a Comment