Total Pageviews

Sunday, February 12, 2012

வாழ்கை தத்துவங்கள்




ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

2 comments:

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

  நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please   காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...