- காலநிலை மாற்றம்: புவி வெப்பமயமாதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
- மழை குறைவு: கோடை காலத்தில்வழக்கமாகப் பெய்ய வேண்டிய கோடை மழை பொய்த்துப் போவதால் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் அதிகரிக்கிறது.
- எல்-நினோ தாக்கம்: வளிமண்டலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் காற்று மற்றும் மேகமூட்டங்கள் குறைந்து சூரியனின் நேரடி கதிர்வீச்சு பூமியை அதிகமாகத் தாக்குகிறது
- மரங்கள் அழிப்பு மற்றும் மாசுபாடு: காடழிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மரங்கள் வெட்டப்பட்டு, கார்பன் மாசுபாடு அதிகரிப்பதால் வெப்பம் தங்கு தடையின்றி கூடுகிறது.
- ஆடிமாசக் காத்துல அம்மியே பறக்கும்' என்பது கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. ஆனால், 'அடிக்கும் அனல் காற்றில் சாலைகளில் வெப்ப அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வழக்கமாகக் கோடையிலும், அக்னி வெயில் நடக்கும் காலநிலையிலும் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும், வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டு வரை இப்படித்தான் இருந்து வந்தது. இதற்கு மாறாக இந்த வருடம் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான இடங்களில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க, கடந்த சில நாள்களாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை விகிதம் குறைந்து காணப்படுவதும் ஒரு காரணியாக இருக்கலாம். சாதாரணமாகவே நகரங்களில் வெயில் கொளுத்தும். இதில் தலைநகர் சென்னையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிக மழை பெய்தாலும், நீர் மேலாண்மை முறையாக இல்லாததால் பாதிக்கப்படும், அதிக வெயில் அடித்தாலும், மரங்கள் அதிகமாக இல்லாமல் பாதிக்கப்படும். வெப்பநிலையைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.
-
"கடலில் இருந்து குளிர்ந்த காற்றானது தரைப் பகுதிக்கு வராததே வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். இன்னும் மூன்று நாள்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28-ம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வய்ப்பு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக வீசும் கடல் காற்றும் தாமதமாக வீசுகிறது. உள் தமிழகத்தில் குறைவான மேகமூட்டம் காணப்படுகிறது. இன்னும் இரண்டு நாள்களுக்கு 3 அல்லது 4 டிகிரி வெப்பம் வெளியாகலாம்" என்றார்.சித்திரையில் கத்தரி வெயில் முடிந்து ஆங்காங்கே மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. தற்போது நிலவும் வெப்பநிலை கோடை வெயிலைத்தான் ஞாபகப்படுத்துகிறது.
Total Pageviews
Tuesday, July 28, 2026
அதிக வெயில் அடிப்பதற்கான முக்கிய காரணங்கள் காலநிலை மாற்றம், கோடை மழை குறைவது மற்றும் எல்-நினோ நிகழ்வு ஆகும்
Sunday, July 26, 2026
தலையில் அதிகமாக வியர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் !
வியர்வை என்பது உடற்பயிற்சி, வெப்பம் மற்றும் மன அழுத்தத்திற்கு உங்கள் உடலின் இயற்கையான எதிர்வினையாகும், இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இது உப்பு சார்ந்த திரவமாக வியர்வை சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. வியர்வைக்கான மருத்துவ பெயர் வியர்வை.
வியர்வை இயல்பானது என்றாலும், போதுமான வியர்வை மற்றும் அதிக வியர்வை இரண்டும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெளிப்புற வெப்பநிலை மாறுபாடுகள் மற்றும் உணர்ச்சி நிலைகள் போன்ற காரணிகள் வியர்வையைத் தூண்டும்.
- அதிகப்படியான வியர்வை சுரப்பிகள்: உடலின் மற்ற பகுதிகளை விட தலையிலும் முகத்திலும் வியர்வை சுரப்பிகள் (Sweat glands) அதிகமாக இருக்கும். [1, 2]
- பாரம்பரியக் காரணங்கள் (Genetics): உங்கள் குடும்பத்தில் பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால், அது உங்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். [1, 2]
- மன அழுத்தம் மற்றும் பதற்றம்: கோபம், பயம், அதிக மன அழுத்தம் (Stress) அல்லது பதற்றம் (Anxiety) ஏற்படும் போது, உடலின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு தலையில் குப்பென்று வியர்க்கும். [1, 2]
- தைராய்டு பிரச்சனை (Hyperthyroidism): தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்யும் போது உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகரித்து, உடல் வெப்பமடைந்து அதிக வியர்வையை உண்டாக்கும். [1, 2, 3]
- சர்க்கரை நோய் (Diabetes): இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறையும் போது (Hypoglycemia) தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வியர்வை அதிகமாக வெளியேறும். [1, 2]
- ஹார்மோன் மாற்றங்கள்: பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் பருவம் (Menopause) அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக இரவு நேரங்களில் தலையில் அதிகமாக வியர்க்கலாம்
- வியர்வை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?வியர்வை வராமல் முழுமையாகத் தடுக்க முடியாது என்றாலும், வியர்வை எதிர்ப்பான் பயன்படுத்துதல், பருத்தி ஆடைகளை அணிதல் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்தல் போன்ற எளிய முறைகள் மூலம் அதைக் குறைக்கலாம்.வியர்வையைக் குறைக்க உதவும் வழிகள்
- வியர்வை எதிர்ப்பு மருந்து: இரவு தூங்கும் முன் அக்குள்களில் ஆன்டிபெர்ஸ்பிரண்ட் (Antiperspirant) பயன்படுத்தவும்.
- சரியான ஆடைகள்: இறுக்கமான மற்றும் நைலான் உடைகளுக்குப் பதிலாக, காற்றோட்டமுள்ள பருத்தி (Cotton) ஆடைகளை அணியுங்கள்.
- உணவு முறை: அதிக காரம் மற்றும் சூடான உணவுகள், காஃபின், மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
- தண்ணீர் குடித்தல்: உடலைச் குளிர்ச்சியாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
- உடல் சுத்தம்: தினமும் குளித்து, உடலை உலர்வாக வைத்திருங்கள். அதிக வியர்வை தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும். !
Monday, July 20, 2026
'ஏகாதசி விரதம்' ஏன்?
Tuesday, July 14, 2026
கணவன் & மனைவி: வாழ்வின் இறுதித் தோழர்கள் !
Monday, July 6, 2026
உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடி துடித்துப் போக மாட்டேன்.
Thursday, July 2, 2026
இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !
Tuesday, June 30, 2026
பல *நோய்கள்* உண்மையில் நோய்கள் அல்ல; அவை *வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்*.
Wednesday, June 24, 2026
உங்கள் வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வது .அவசியம்
உங்கள் வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வது, அவசர காலங்களில் அவர்களுக்குப் பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கும். இது தேவையற்ற அலைச்சலையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும்.
- வங்கி மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் (FD/RD): வங்கிக் கணக்கு எண்கள், கிளை விவரங்கள் மற்றும் நாமினி (Nominee) பற்றிய தகவல்கள்.
- மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகள் (Stocks): முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பெயர்கள், டிமேட் (Demat) கணக்கு விவரங்கள்.
- காப்பீட்டுக் கொள்கைகள் (Insurance): பாலிசி எண்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம் செலுத்தும் காலங்கள்.
- ஓய்வூதியத் திட்டங்கள்: EPFO, PPF, அல்லது NPS கணக்கு விவரங்கள்.
- ஒற்றை ஆவணம்: உங்கள் அனைத்து முதலீடுகளையும் உள்ளடக்கிய ஒரு ‘குடும்ப நிதி ஆவணத்தை’ (Family Financial Document) தயார் செய்து வையுங்கள்.
- நாமினேஷன்: அனைத்து முதலீடுகளிலும் நாமினி விவரங்கள் சரியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- பாதுகாப்பு: இந்த ஆவணத்தை அல்லது தகவல்களை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அல்லது குடும்பத்தில் உள்ள நம்பகமான உறுப்பினரிடம் பாதுகாப்பாகப் பகிரவும்.
"சார், அந்த சிங்காரத்தோட [Deposit ] டெபாசிட் எல்லாத்தையும் நம்ம Head office-ல unclaimed deposit-ஆ மாத்திட்டாங்க சார்"
"ஆமாம்பா, அதுதான் பேங்க் பாலிசி. Claim செய்யப்படாத டெபாசிட்டுக் கெல்லாம் அதே கதி".
"அப்போ.... எதிர்காலத்தில் ஒரு நாள் அவருடைய வாரிசுகள் வந்து கேட்டால் எப்படி சார் கொடுப்பது?"
"வாரிசுகள் எல்லா டாக்குமெண்ட்டும் கொடுத்து, அவை சரியாகவும் இருந்தால், ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்று அவர்களுக்குக் கொடுத்து விடலாம்."
மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் நடக்கிற இந்த உரையாடலை நான் மேலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தான் அந்த சிங்காரம்.
மேலிருந்து? ஆமாம், மேலே இருந்துதான். நான் பூலோகத்தை விட்டுப் போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பூலோக கணக்கில் 10 வருடம். பத்து நாள் என்று தான் இங்குள்ள கணக்கு!
இப்போது நான் இருப்பது சொர்க்க பூமி இல்லை. நரக லோகமும் இல்லை. விஷ்ணு லோகமும் இல்லை. இது என்ன லோகம் என்று எனக்கே தெரியாது. மறுபிறவி எடுக்க வேண்டியவர்கள் இங்குதான் இருப்பார்களாம். இன்னும் எவ்வளவு காலம் இங்கு இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.
என்னைப் போல் பூலோகத்தில் வாழ்க்கையை முடித்தவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். என் மனைவியும் கூட!
நான் 'போய்' மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளும் 'போய்'ச் சேர்ந்தாள். அதாவது இங்கு வந்து சேர்ந்து விட்டாள்.
இது ஒரு parking place என்று நினைக்கிறேன். மறுபடியும் பூலோகத்தில்தான் பிறக்கப் போகிறேனா, அப்படியே பிறந்தால் மனிதனாகப் பிறப்பேனா, மாடாகப் பிறப்பேனா, சிங்கமாகப் பிறப்பேனா, புழு பூச்சியாகப் பிறப்பேனா...... எதுவும் எனக்கு இப்பொழுது தெரியாது. எனக்குத் தெரிந்தால் தான் உங்களுக்கு சொல்ல முடியும். அதுவரை பொறுக்கவும்!
யம கிங்கரர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவருக்கு நான் இப்போது நண்பன்.
நான் சூசகமாக விசாரித்த வரை, எமதர்மராஜன் இன்னும் முடிவெடுக்க வில்லையாம். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதுவரைக்கும் இந்த ரெண்டுங்கெட்டான் லோகத்தில் வெயிட்டிங்!
அந்த வங்கியில் உள்ள டிபாசிட்டுகள் என்னுடையது தான்! எங்கள் இருவர் பேரில் இருந்தன. நான் 'போன' பிறகு என் மனைவி தான் அவற்றுக்குச் சொந்தக்காரி! இப்பொழுது அவளும் 'போய்'ச் சேர்ந்து விட்டபடியால் என் மகனும் மகளும் தான் ஜாயிண்ட் சொந்தக்காரர்கள். அதாவது..... Joint Nominees.
என் மகன் புதுடில்லியில் சகல வசதிகளுடன் வாழ்கிறான். மகள் திருமணமாகி ஜெர்மனியில் எங்கோ செட்டிலாகிப் பல ஆண்டுகள் கழிந்து விட்டன.
மகன் அந்த வங்குக்கு சென்று என்னுடைய டெபாசிட்களை Claim செய்தான். ஜாயிண்ட் நாமினேஷன் ஆனபடியால் அண்ணன் தங்கை இருவருடைய KYC papers-உம் கேட்டார்கள். என் மகளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இதில் எந்த அக்கறையும் இல்லை. அவளுக்குத் தன் அண்ணனுடன் தொடர்பும் இல்லை. பிறகு என்ன செய்வது?
நான் ஏன் இவ்வளவு பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனேன் என்று தெரியவில்லை. என் வாழ்நாளில் நானே அனுபவித்துவிட்டுப் போயிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது.
ஏழைக் குழந்தைகளுக்கும் அனாதைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தேன். வேத பாடசாலைகளுக்கும் கோசாலைகளுக்கும் உதவி செய்திருக்கிறேன். சிறிய கோவில்களுக்குத் திருப்பணிக்குப் பண உதவி செய்திருக்கிறேன்.
இருந்தும், இவ்வளவு பணம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. குறைந்தது, அந்தப் பழைய காரை விற்றுப் புதிய கார் வாங்கி நான் அனுபவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. வீட்டில் உள்ள பழைய பொருட்களை போட்டு புதிய பொருட்களை வாங்கி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உலகச் சுற்றுலா சென்று வந்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
வயதான காலத்தில் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப் படும் என்று என் மனைவி அடிக்கடிக் கூறுவாள். எனவே அந்த டெபாசிட்டுகளைத் தொட முடியவில்லை.
நானும் அனுபவிக்க முடியவில்லை. இப்போது என் சந்ததியினரும் அதை அனுபவிக்கவில்லை. வட்டி கொடுக்காமல் வங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறது!
என்னைப் போல்ஆயிரமாயிரம் பேர் தாங்கள்
சேர்த்து வைத்த பணம்
இப்படித்தான் அவர்களும் அனுபவிக்காமல்
சந்ததியினரும் அனுபவிக்காமல் வங்கிகளில் கிடக்கிறது.
இதே போலத்தான் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும் கூட!
Unclaimed policy மற்றும் lapsed policy-களில் எத்தனையோ கோடி ரூபாய் கேட்பாரற்றுக் குவிந்து கிடக்கிறது!
நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்திச் சம்பாதித்துச் சேர்த்த சேமிப்புக்குத் தான் இந்த கதி என்றால், மதுரையில் நான் வசித்த அதிநவீனக் குடியிருப்பும் இப்படியே கேட்பாரற்றுக் கிடந்தது. unclaimed property ஆகிவிட்டது.
இந்தச் சொத்தை மீட்க யாரும் வரமாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு அந்த builder அந்த வீட்டுக்கு ஒரு புது விற்பனைப் பத்திரம் தயார் செய்து கதவு எண் 20 என்பதை 20 A என்று மாற்றி இன்னொருவருக்கு விற்று விட்டார்!
நான் சாவதற்கு முன்பே அதை விற்றுப் பணமாக்கி இருக்கலாம். குறைந்தது ரூபாய் 50 லட்சம் கிடைத்திருக்கும். இன்று அதற்கு மார்க்கெட் விலை ஒரு கோடிக்கு மேல்!
அந்த வீட்டை மகன் பெயருக்கு மாற்றி, பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஏனோ, நான் அதை செய்யவில்லை. என் கண் முன்னே கஷ்டப்படும் உறவினர்களுக்காவது அதை எழுதி வைத்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யத் தவறி விட்டேன்.
ஆயிரமாயிரம் பேர் என்னைப் போலவே தங்கள் சொத்துக்களை அப்படியே அனாமதேயமாக விட்டு விட்டுப் போயிருப்பார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவற்றை யாராவது அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.
இதுதான் தலைவிதி என்பதா?
அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்தாலும் கூட இவற்றை நான் மீண்டும் அடைய முடியாது. புதிய பிறவி எடுத்த உடனேயே பழைய பிறவியின் நினைவுகள் மறந்து போய் விடுமாம்.
இதற்கு என்ன தீர்வு? யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாய்ப்புக் கிடைத்தால் எமதர்மராஜனிடமே கேட்டு விடுகிறேன். என்ன சொல்கிறார் பார்ப்போம்.
யாரோ கிங்கரர் என்னைக் கூப்பிடுகிறார். உள்ளே போகுமாறு கட்டளை இடுகிறார். உள்ளே யம தர்பார்.
சரி, விடைபெறுகிறேன். உள்ளே போய் விஷயம் அறிந்து கொண்டு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
Sunday, June 21, 2026
கக்கனின் மகனுக்கு இந்த நிலை!
தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்.
"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.
நான் சந்தித்த அந்த நபர் –காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?
அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.
கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.
சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?
அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.
இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.
நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள்
நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.
- திரைச்செய்திகள் 16-12-21
அதிக வெயில் அடிப்பதற்கான முக்கிய காரணங்கள் காலநிலை மாற்றம், கோடை மழை குறைவது மற்றும் எல்-நினோ நிகழ்வு ஆகும்
வெயில் மற்றும் வெப்பம் அதிகரிக்கக் காரணங்கள் காலநிலை மாற்றம்: புவி வெப்பமயமாதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை ஆண்டுதோறும் உயர்ந்து வர...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...







