Total Pageviews

Saturday, August 29, 2026

உங்கள் வீட்டுக்கு பட்டா இதுவரை வாங்கவே இல்லையா.. யாருக்கு எல்லாம் சிக்கல் வரலாம்

 

Velmurugan P

சென்னை: ஒரு 10, 15 வருடம் முன்பு அல்லது அந்த காலத்து வீடுகளில் வசிக்கும் பலர் பத்திரம் மட்டுமே ஆதாரம் என்று வசித்து வருகிறார்கள். தாத்தாவின் பெயரில் உள்ள வீடு இருக்கிறது அல்லது பாட்டி பெயரில் வீடு இருக்கிறது ஆனால் இன்று வரை பட்டா வாங்கவே இல்லை. ஆனால் பாட்டி, தாத்தா உயிருடன் இல்லை என்றால் சற்றே சிக்கல் வரலாம். என்னென்ன சிக்கல்கள் வரலாம். ஏன் பட்டா முக்கியம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அந்த காலத்தில் பலர் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள், பத்திரப்பதிவு மட்டுமே செய்துவிட்டு வீட்டு வரி, குழாய் வரி, மின் இணைப்பு என எல்லாமே வாங்கியிருப்பார்கள். ஆனால் இன்றைக்கு பட்டா இல்லை என்றால் நிறைய சிக்கல்கள் வருகிறது. ஒரு வீட்டை விற்க வேண்டும் என்றால், அந்த வீட்டிற்கு பட்டா வேண்டும். பட்டா வாங்க முடியாது என்றால், அந்த நிலத்தை யாரும் வாங்க முன்வருவது இல்லை.

பஞ்சமி நிலம், கள்ளர் ஜாதி நிலம், வண்ணார் நிலம், பூமி தான நிலம், மேய்க்கால் புறம்போக்கு, சாலை ஆக்கிரமிப்பு, நீர் வழி ஆக்கிரமிப்பு, வனப்பகுதி நிலம், கோயில் நிலம் என என பல்வேறு வகை நிலங்களில் வீடுகளை அந்த காலத்தில் வாங்கியவர்கள் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். இந்த நிலங்களுக்கு அன்றைய சூழலில் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வாங்கியவர்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு அவர்கள் பட்டா வாங்குவது ஏறக்குறைய சாத்தியமே இல்லை. இதில் சாதி வாரியாக இலவசமாக கொடுத்த நிலங்களை வேண்டுமானால், அந்தந்த சாதியினருக்கு விற்றுவிட முடியும்.. மற்ற நிலங்களை விற்கவே முடியாது என்பதே எதார்த்தம்.

இது ஒரு சிக்கல் என்றால், இன்னொரு நடைமுறை சிக்கல் இருக்கிறது.. ஒரு மூதாதையர் பெயரில் ஒரு சொத்து இருக்கும். அந்த சொத்து, இன்று வரை பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே இருக்கும். அந்த மூதாதையரின் மகன் அல்லது மகளின் பேரன், பேத்திகள் இப்போது போய் சொத்தை விற்கலாம் என்று நினைத்தால், வாரிசு சான்றிதழ் கேட்பார்கள். தாத்தா, அப்பா என வரிசையாக வேண்டும்.. அதனை வாங்குவதற்கு பெரிய அலைச்சல் ஏற்படும். வாங்கிவிடலாம் என்றாலும், அதற்குமுறையான ஆவணங்களை சமர்பித்து கடினமான நிலையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

அதேபோல் இன்னொரு நடைமுறை சிக்கல் உள்ளது.. பட்டா இல்லாவிட்டால், விற்க முடியாது என்பதால் பலரும்பட்டா வாங்கிய பின்னரே நிலத்தை வாங்க முன் வருவார்கள். பட்டா இல்லாத நிலங்களுக்கு அல்லது வீடுகளுக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது. எனவே வீடு கட்ட முடியாது. ஏற்கனவே கட்டிய வீட்டை இடித்து கட்ட வேண்டும் என்றால் அந்த வீட்டிற்கு பட்டா வாங்கியிருக்க வேண்டும். ஆகவே உங்கள் அப்பா, தாத்தாக்கள் வீடுகளுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு பட்டா வாங்காமல் விட்டிருக்கிறார்களா என்று பாருங்கள். பட்டா வாங்காமல் விட்டுவிட்டார்கள், அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே வாங்கிவிட்டால் எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் தேவையற்ற மனஉளைச்சல் மற்றும் அலைச்சலை சந்திக்க நேரிடலாம்.

அதேபோல பல ஆண்டுகளாக பட்டா வாங்காமல் விட்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க போகும் போது , பக்கத்து வீட்டின் நில உரிமையாளருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சில அடிகள் சேர்த்து பட்டா வழங்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. நாளடைவில் நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டு, அதன்பிறகு தெரியவந்தால், உங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் வரும். எனவே பட்டா வாங்காமல் இருந்தால் வாங்கிவிடுங்கள். முடிந்த வரை சரியான முறையில் உயில் எழுதி, அதனை முறையாக பதிவு செய்து வந்தால், எந்த காலத்திலும் சிக்கல் வராது.

Friday, August 28, 2026

*மெல்ல அழிந்த_ இயற்கை உணவுகள்..!*

 

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப் பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்

நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று, எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று ,

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்!

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்

அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம், இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்... 

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்

காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்

நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்

சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்

ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼🌹

கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்

 

கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்

கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்

முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்

தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்

அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்

பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்

வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்

நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்

மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்

கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்

வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?

பாரத பூமி புண்ணிய பூமி

பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...

பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!

ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...

'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!

ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.

ஏன்?

இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,

அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....

அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.

ஏன்?

எங்கெல்லாம்

புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு

அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.

விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.

அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.

பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.

அப்பொழுதும் கூட அந்த மக்கள்

காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.

எனக்குத் தெரிந்து ...

ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.

நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.

ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.

மா பலா நாவல் அத்தி கொய்யா....

என்று எத்தனை மரங்கள் உள்ளன.

அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?

நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.

காரணம்...

MMMC: mass media mind control.

"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.

தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்

கனியை மறந்தான்.

கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .

ஆனால் இதையெல்லாம் தடுத்து

கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.

அதையெல்லாம் ஏதோ

'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்

தின்னு

உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.

கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.

நல்லா புரிஞ்சிக்குங்க...

'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை முழு முற்றாகத் தடுத்து,

'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..

நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...

கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்

மற்றும்

அனைத்து இடங்களிலும்

மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.

தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே

மகிழ்வாக இருக்கும்.

உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.

நீங்கள்

மீண்டும் மீண்டும்

இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....

அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'

ஓர் உயர்ந்த மண்ணை

இப்படி நரகமாக்கிவிட்டு,

ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.

அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.

ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.

கார்ப்பரேட் அறிவாளியல்ல...

நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.

'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."

இப்படிக்கு..

பலன் தரும் மரங்கள்..!

🌴🌾🌳🌲🦧🍍🥬🌤️💐

கம்ப்யூட்டர்ல ரொம்ப நேரமா வேலை செய்றீங்களா...? உங்க முதுகுவலிக்கு இதுதான் தீர்வு!

 

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் ஆகிவிடும்.

இது கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

ஹோட்டல் சாப்பாட்டைத் தவிர்ப்பது நமது உடல் நலனைப் பாதுகாக்க மிகவும் அவசியமான செயலாகும்.

 


ஹோட்டல் சாப்பாட்டைத் தவிர்ப்பது நமது உடல் நலனைப் பாதுகாக்க மிகவும் அவசியமான செயலாகும்.

ஹோட்டல் சாப்பாட்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

·         அதிக எண்ணெய் மற்றும் உப்பு: ஹோட்டல் உணவுகளில் சுவைக்காகவும், நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் அதிகளவு எண்ணெய், உப்பு மற்றும் கொழுப்புச் சத்து சேர்க்கப்படுகிறது.

·         ரசாயன நிறமிகள்: உணவுகள் பார்க்க அழகாகவும், மணமிக்கதாகவும் இருக்க சில செயற்கை நிறமிகளும் ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

·         சுத்தமின்மை: பல இடங்களில் உணவு தயாரிக்கப்படும் இடங்கள் மற்றும் பாத்திரங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுவதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் உணவு நச்சு (Food poisoning) ஏற்படும் அபாயம் உண்டு.

·         உடல்நலப் பிரச்சினைகள்: தொடர்ந்து ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரக்கூடும்.

வீட்டு உணவின் நன்மைகள்

·         தூய்மையான முறையில், நல்ல சத்தான பொருட்களைப் பயன்படுத்திச் சமைக்கலாம்.

·         உடலுக்குத் தேவையான சரியான அளவுக் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

·         செரிமானம் சீராக இருக்கும்; உடல் எடைக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

இன்றைய அவசர யுகத்தில் அனைத்திலும் அவசரமே!

பிறத்தல் மட்டுமே பத்து மாதகால தாமதம்

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை அவசரம் ! வேகம்  !பதட்டம்  !இதுவே வாழ்க்கையாகிறது !

உணவு பழக்கமும் இப்போது அவசரமாகி விட்டது !

பொறுமையாக மென்று விழுங்க வேண்டிய உணவை அவசரமாக விழுங்கி அஜீரண கோளாறில் சிக்குவதும் நாமே!

மனிதனை தவிர வேறு எந்த விலங்கும் தனக்கான உணவை அவசர கதியில் உண்பதில்லை

கேள்விக்கான பதிலுக்கு வருவோம்

99% சதவீத உணவகங்களில் சுவைகூட்டியாக அஜ்னமோட்டோவும் சாஸ் வகையறாக்களும் அழகுகூட்டியாக கலர் பொடி வகைகளும் சேர்த்தே தயாரிக்க படுகின்றன இவையனைத்தும் கெமிக்கல் சார்ந்தவை உடலுக்கு பெரிய அளவில் தீங்கு இளைப்பவை

ஒருகாலத்தில் அசைவ உணவுகளை வேகவைத்திட காலதாமதமாகும்

ஆனால் இன்று ரசாயன பொருட்கள் உதவியுடன் சீக்கிரமே வேகவைக்கின்றனர்

சர்க்கரை ரத்த அழுத்தம் இதயநோய் போன்றவை ஏற்பட முக்கிய காரணம் துரித உணவு வகைகளே

பொதுவாக மீனோ சிக்கனோ மட்டனோ எதுவானாலும் சரியாக சுத்தம் செய்வதில்லை ஏற்கனவே கழுவிய பழைய தண்ணீரில் மீண்டும் மீண்டும் கழுவி சமையலுக்கு பயன்படுத்துவது

குளிர் சாதன பெட்டியின் உதவியுடன் அசைவ உணவுகளை பதப்படுத்தி நாள் கணக்கில் பயன்டுத்துவது சுத்தமில்லாதது போன்றவையும் அடங்கும்

எத்தனையோ வகைவகையான முயற்சி எடுத்தும் சிலரின் அடிப்படை குணங்களை மாற்ற முடியவில்லை

முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை சுத்தம் கண்டிப்பாக தேவை

சுத்தமான ஆரோக்கியமான உணவு வீட்டு உணவுகளே !

ஆரோக்கிய கேடு விளைவிக்கும் உணவுவகைகளே ஹோட்டல் உணவுகளே !

வயிறு பிரச்சினை இல்லாதவர்கள் எங்கும் சாப்பிடலாம்.

செரிமான பிரச்சினை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் ஹோட்டலை தவிர்ப்பது நல்லது. காரணம் அஜீனோ மோட்டோ, சமையல் சோடா, வினிகர் பயன்பாடு

தெருவோரங்களில் பாட்டி இட்டலி சுட்டு விற்பதை காணமுடியும். இவை பெரும்பாலும் தொந்திரவு தருவதில்லை

ஹோட்டலில் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பிரச்சினை அல்சர், வயிறு மந்தம்

குறிப்பாக சிறிய கடைகளில் பரோட்டாவிற்கான குருமா பலருக்கும் ஒத்துக்கொள்வதில்லை (அஜீனோ மோட்டோ சேர்க்கப்படுகிறதாம்)

பெரும்பாலும் தரமற்ற சமையல் எண்ணை பயன்படுத்தப்படுகிறது

அசைவ உணவகங்களில் பெரும்பாலும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை. 

மருத்துவர் உங்களிடம் சொன்ன விசித்திரமான அல்லது வேடிக்கையான விஷயம் என்ன?

  விபத்து அல்லது ஏதேனும் அவசரகால சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு வரப்படும் நபர்களை சோதித்த மருத்துவர்கள் ஒரு பத்து நிமிடம் முன்னாலே கொண்ட...